×

கோதாவரி மாவட்டத்தில் சோகம் ஆற்றுக் கால்வாயில் கார் கவிழ்ந்து நீரில் மூழ்கி கணவன், மனைவி பலி

*உறவினர்கள் 5 பேர் பத்திரமாக மீட்பு

திருமலை : கோதாவரி மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த உறவினர்கள் 5 பேர் பத்திரமாக மீட்டனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மண்டப்பேட்டை மண்டலம் வேலக்கத்தோட்டா கிராமத்தை சேர்ந்த போகில்லா வீர வெங்கடசதீஷ்(40), ராஜமகேந்திரவரத்தில் உள்ள ஒரு காகித ஆலையில் மின் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி காக்கிநாடாவில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சதீஷ், அவரது மனைவி பத்மா(36), சதீஷின் தந்தை வெங்கட் ராவ், தாய் பத்மா, மகன்கள் மோக்ஷக்னா மற்றும் ஜிதேஷ் ஆகியோருடன் காரில் சென்று பங்கேற்றனர்.

திருமணம் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல நேற்று அதிகாலை காரில் புறப்பட்டடனர். கார் வேலக்கத்தோடு சாலையில் இருந்து பெக்கெட்டி பாகலு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கார் கோதாவரி ஆற்றின் பெரிய கால்வாயில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் காரின் முன்பகுதி தண்ணீரில் சிக்கிக்கொண்ட நிலையில் பின்பகுதி மேலே மிதந்தது. சதீஷ் காரை ஓட்டிச் சென்ற நிலையில் அவரது மனைவி பத்மா(36) முன் இருக்கையில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அதே நேரத்தில் சதீஷின் தந்தை வெங்கட் ராவ், தாய் பத்மா, மகன்கள் மோக்ஷக்னா மற்றும் ஜிதேஷ் ஆகியோர் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிலையில் விபத்து நடந்த நேரத்தில் சத்தம் கேட்டு அங்கு இருந்த உள்ளூர் இளைஞர்கள் உடனடியாக காரில் இருந்த முதியவர்களையும் குழந்தைகளையும் மேலே கொண்டு வந்தனர்.

இதற்கிடையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கிராமப்புற போலீசார், கிரேனின் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக மண்டபேட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஊரக காவல் நிலைய எஸ்.ஐ. கிஷோர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் தோரராஜு தெரிவித்தார்.

Tags : Godavari district ,Tirumala ,Andhra Pradesh… ,
× RELATED ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி...