அறந்தாங்கி வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மை, வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைகுழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிகுழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு சார்ந்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிகுழு உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டதற்கான மதிப்பூதியம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மூலம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசகங்கள் எழுதுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வாசகங்கள் மாணவர்கள் பார்வையில்படும் வண்ணம் பள்ளி வகுப்பறைகள், உணவு அருந்தும் கூடங்கள், விளையாட்டு திடல்கள், பள்ளி சுற்றுச் சுவர்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம், காலை வணக்கம் கூடம் ஆகிய இடங்களில் எழுதுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 158 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான, ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுனர் சுகன்யா செய்திருந்தார்.

Related Stories: