×

44 சதவீத வாக்குகளை பெற்று திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என புதிய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அனல் பறக்கும் பிரசாரம் நடக்கும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு வரும் நிலையில் இன்சைடு எலெக்ஷன் கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப் பெற்று 159 முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 33% வாக்குகளுடன் 64 முதல் 70 இடங்களைப் பெறும் என்றும், தவெக 18% வாக்குகளைப் பெற்று 4 முதல் 6 இடங்களைக் கைப்பற்றும். நாம் தமிழர் கட்சி 3% வாக்குகளைப் பெறும். முதலமைச்சர் வேட்பாளருக்கான விருப்பத் தேர்வில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 44 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி 28 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். விஜய் 24 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். திமுக அரசின் செயல்பாட்டைப் பொறுத்தவரை 55 சதவீத மக்கள் தற்போதைய அரசே தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறு அந்த கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கோடைக்காலம் தொடங்கி உள்ளதால்...