தர்மபுரி:தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். நேற்று அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவித்துள்ள அசையும், அசையாத சொத்துக்கள் விவரம் வருமாறு: சவுமியா அன்புமணிக்கு, ரூ.1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 835 மதிப்பிலான 151.51 கேரட் வைர நகைகள், ரூ.4 கோடியே 26 லட்சத்து 78 ஆயிரத்து 828 மதிப்பிலான 2,927 கிராம் தங்க நகைகள், ரூ.68 லட்சத்து 74 ஆயிரத்து 140 மதிப்பிலான 26.44 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.1 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.49 லட்சத்து 65 ஆயிரத்து 160 வருவாய் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் ரூ.17 கோடியே 15 லட்சத்து 5 ஆயிரத்து 641 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவர் பெயரில் வீடு, நிலங்கள் என அசையாத சொத்துகள் ரூ.48 கோடியே 79 லட்சத்து 1,486 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சவுமியா பெயரில் மட்டும் ரூ.65 கோடியே 94 லட்சத்து 7,127 உள்ளதாக தெரிவித்துள்ளார். இவை உள்பட சவுமியா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் அசையும், அசையாத சொத்துக்கள், நகைகள் என மொத்தம் ரூ.67 கோடியே 52 லட்சத்து 39 ஆயிரத்து 995 உள்ளது. அதேபோல, பல்வேறு வகையில் கடனாக ரூ.8 கோடியே 99 லட்சம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
