×

செங்கோட்டையன் சொத்து மதிப்பு ரூ.11.50 கோடி

 

கோபி: கோபி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன் பெயரில் அசையும் சொத்து 6 கோடியே 58 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், அசையா சொத்து 4 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் உள்ளது. இதில் அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் 2 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 2,391 கிராம் தங்கமும், செங்கோட்டையன் பெயரில் 2 கோடியே 58 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2067.84 கிராம் தங்கமும் உள்ளது.

இது தவிர 3 டிராக்டர், 3 கார்கள் உள்ளது. மனைவி ஈஸ்வரி பெயரில் 1 கோடியே 14 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 14.60 ஏக்கர் நிலமும், இந்து கூட்டு குடும்ப சொத்தாக கே.ஏ.செங்கோட்டையன் பெயரில் 4 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 973 ரூபாய் மதிப்புள்ள 55.59 ஏக்கர் நிலமும் உள்ளது. மொத்தம் 3 வழக்குகள் நிலவையில் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

 

Tags : Sengottaiyan ,Gopi ,K.A. Sengottaiyan ,Thaveka ,
× RELATED கோடைக்காலம் தொடங்கி உள்ளதால்...