×

அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்து விவரம்; கே.சி.வீரமணிக்கு ரூ.57 கோடி சொத்து

 

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்கள் நேற்று பல்வேறு இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணிக்கு அசையும் சொத்துக்கள் ரூ.41 கோடியே 5 லட்சத்து 28 ஆயிரத்து 586 மற்றும் அசையா சொத்துகள் ரூ.16 கோடியே 84 லட்சத்து 9 ஆயிரத்து 887 என மொத்தம் ரூ.57 கோடியே 89 லட்சத்து 38 ஆயிரத்து 473 மதிப்பில் சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்குகளில் ரூ.21.53 லட்சம் உள்ளது. நகைகள் 450 கிராம் தங்கம் மற்றும் 100 கிலோ வெள்ளி உள்ளதாக தெரிவித்துள்ளார். கையில் ரொக்கமாக ரூ.22 லட்சத்து 92 ஆயிரத்து 900 வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களை ஒப்பிடுகையில், தற்போது அசையும் சொத்துகள் ரூ.33.68 கோடிக்கு உயர்ந்துள்ளது. அசையா சொத்துகள் ரூ.4.24 கோடிக்கு உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு ரூ.37.92 கோடி உயர்ந்துள்ளது. 7 வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும், இதுவரை எந்த வழக்கிலும் தண்டனை பெறவில்லை என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் அசையும் சொத்துக்களும், ரூ.1 கோடியே 6 லட்சத்து அசையா சொத்துக்களும், அவரது மனைவிக்கு ரூ.3 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.24 லட்சத்து 54 ஆயிரம் அசையா சொத்து உள்ளது. வேலுமணிக்கு சொந்தமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், அவரது மனைவிக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்க நகைகள், மகளுக்கு ரூ.2.50 கோடி தங்கமும், ரூ.2.50 கோடி அசையும் சொத்து உள்ளது. இதுதவிர 12 வழக்குகள் உள்ளது. வருமான வரி செலுத்துவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுவில் எஸ்.பி.வேலுமணி ரூ.5.59 கோடி சொத்து மதிப்பு காண்பித்து இருந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.8.15 கோடி சொத்து மதிப்பை காண்பித்துள்ளார். கடந்த 5 வருடங்களில் அவரது சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பவானி தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் சொத்து விவரம்: அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 57 லட்சத்து 67 ஆயிரத்து 41, மனைவி தேவியின் பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.2 கோடியே 62 லட்சத்து 31 ஆயிரத்து 865 உள்ளது. மனைவியின் சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 540 எனவும், பரம்பரை சொத்துக்களாக வந்த அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.85 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.93 கோடியே 46,088 உள்ளது. 70 பவுன் நகைகள், ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள ஒரு குவாலிஸ் கார் உள்ளது. பூர்வீக சொத்து, சுயமாக சம்பாதித்தது, தறிப்பட்டறை, சாயப்பட்டறை, லைன் கடை என அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.76.82 லட்சம் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் 96 பவுன் நகைகளும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.01 கோடியே 39 ஆயிரத்து 200 உள்ளது என தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமிக்கு அசையும் சொத்துகளாக ரூ.78.34 லட்சம், அசையா சொத்துகளாக ரூ.9 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரம், பூர்வீக சொத்தாக ரூ.9 கோடியே 62 லட்சத்து 86 ஆயிரம் இருப்பதாகவும், பங்கில் முதலீடாக தனது பெயரில் ரூ.9 ஆயிரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ரூ.29 ஆயிரத்து 186 கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனக்கு மொத்தம் ரூ.20 கோடியே 34 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல், அவரது மனைவியிடம் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 60 உள்ளதாகவும், மகன்களிடம் ரூ.17 லட்சத்து 11,990 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயரில் அசையும் சொத்துகளாக ரூ.4 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரம், அசையா சொத்துகளாக ரூ.2 கோடியே 78 லட்சத்து 46 ஆயிரம் இருப்பதாகவும், பங்கில் முதலீடாக ரூ.92 லட்சத்து 78 ஆயிரத்து 440 இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கே.பி.அன்பழகனுக்கு அசையும், அசையாத சொத்துகள் ரூ.2 கோடியே 77 லட்சத்து 64,257 உள்ளது என குறிப்பிட்டுள்ளார். கே.பி.அன்பழகன் பெயரில் கடன் இல்லை. தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. அவரது மனைவி மல்லிகா பெயரில் ரூ.9 கோடியே 96 லட்சத்து 73,425, வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கையிருப்பு, 700 கிராம் தங்க நகைகள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார், மூத்த மகன் சந்திரமோகன் பெயரில் ரூ.5 கோடியே 19 லட்சத்து 45,680, 2வது மகன் சசிமோகன் பெயரில் ரூ.21 கோடியே 8 லட்சத்து 74,548, மருமகள் பெயரில் ரூ.18 லட்சத்து 70,414 மதிப்பிலான அசையும், அசையாத சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உடுமலை தொகுதியில் போட்டியிடும் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு 35 லட்சத்து 21 ஆயிரத்து 398 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளது. மனைவியிடம் 1 கோடியே, 8 லட்சம் மதிப்புள்ள, 864 கிராம் தங்க ஆபரணங்களும், 1 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 214 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், குடும்பத்திற்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 990 மற்றும் மகனிடம் 6,098 என ரூ.1 கோடியே 77 லட்சத்து 25 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளது. மனைவி பெயரில் 50 லட்சம் நகைக்கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தொகுதியில் ேபாட்டியிடும் திண்டுக்கல் சீனிவாசன் தனது சொத்து மதிப்பாக ரூ.8.83 கோடி சமர்ப்பித்துள்ளார். இதில் அசையும் சொத்து என ரூ.95,00,302, அசையா சொத்துக்கள் என ரூ.7,42,41,000 காட்டியுள்ளார். தனது பெயரிலோ, மனைவி பெயரிலோ கடன் இல்லை என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 3 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை எந்த வழக்கிலும் அவர் தண்டனை பெறவில்லை. சிவகாசி தொகுதி வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி தனது சொத்து மதிப்பு ரூ.3.35 கோடி என சமர்ப்பித்துள்ளார். இதில், அசையும் சொத்து ரூ.77,34,239, அசையா சொத்து ரூ.2,57,73,420 மற்றும் கடன் ரூ.1,11,67,354 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவின் மோசடி வழக்கு, வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்குகள் உள்ளன. மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது சொத்து மதிப்பாக ரூ.92.49 லட்சம் சமர்ப்பித்துள்ளார். இதில் அசையும் சொத்து ரூ.62,65,020, அசையாச் சொத்துகள் ரூ.29,84,414. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தளவாய்சுந்தரத்திடம் மொத்தம் ரூ. 1,96,38,960 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன.

ரூ. 1,12,00,000 மதிப்பிலான அசையாச் சொத்துக்களைப் சொத்துக்கள் உள்ளன. ரூ. 19,93,154 கடன்கள் உள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு அசையும் சொத்தாக ரூ.3 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரத்து 150 மற்றும் அசையாத சொத்தாக ரூ.10 கோடியே 22 லட்சம் என மொத்தம் ரூ.13 கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 150 உள்ளது. ரூ.2.63 கோடி கடன் உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது பெயரில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 849 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.13.89 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் என மொத்தம் ரூ.15 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 849 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.6 கோடியே 91 லட்சத்து 49 ஆயிரத்து 851 மதிப்பிலான சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Veeramani ,Chennai ,Majhi Maji ,Jolarpet ,Tirupathur district ,
× RELATED கோடைக்காலம் தொடங்கி உள்ளதால்...