நடித்து நாட்டை நாசமாக்கும் விஜய்க்கு ஓட்டா? சீமான் ஆவேசம்

திருச்சியில் மரக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பேசுகையில், ‘‘மக்களின் உரிமை என்பது வாக்குரிமை அதை சரியாக பயன்படுத்தினால் மக்கள் வாழ்வு உயரும், வளம் பெருகும். எங்களுக்கு வாக்களிப்பதை காட்டிலும் நடித்து நாட்டை நாசமாக்கும் சிலருக்கு (விஜய்) வாக்கு செலுத்த வேண்டும் என்றால் அது மக்களின் நஷ்டம்’’ என்றார்.

நேற்று முன்தினம் இரவு கரூர் 80 அடி சாலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் சீமான் பேசுகையில், ‘‘என் தம்பி அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என நினைக்கிறேன். பாஜவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலேயே அக்கட்சிக்கு மூச்சு திணறி விட்டது. கட்சிக்காக உழைத்த முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல், யார் யாருக்கோ சீட் கொடுத்துள்ளனர். இது தான் பாஜவின் தற்போதைய நிலை’’ என்றார்.

* கத்தி கத்தி சாக விடாதே… வெசம் வச்சு கொன்னுடு…
குன்னூரில் சீமான் பேசுகையில், ‘ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹெலிகாப்டர், அதற்குத் தேவையான எரிபொருள், மொட்டை மாடியில் தரையிறங்கும் வசதி எனச் சில பொய்யான வாக்குறுதிகள் என்னாலும் கொடுக்க முடியும். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைரம் தருவதாகவும் போலி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் இதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒன்னு என்னைக் கூட்டிட்டுப் போய் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்றுவிடு. நிம்மதியாக என்னைச் சாகவிட்டு விடு. இல்லேன்னா ஆட்சியை கொடுத்துட்டு வாழப்பார். உருப்படியாக ஒரு முடிவு எடு. கத்திக் கத்தி சாக விடாதே. என் பாவமே உன்னை சும்மா விடாது’’ என்றார்.

Related Stories: