×

சில்லி பாய்ன்ட்…

* ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு, இது இரண்டாவது, தொடர் வெற்றி. அப்போட்டியின்போது, பந்துகள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலும் பஞ்சாப் அணி பந்துகள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து 2வது முறையாக இந்த தவறை செய்ததால், ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டதாக தெரிகிறது.

* டபுள் கோல் போட்டு ரொனால்டோ அமர்க்களம்
ரியாத்: சவுதி புரோ லீக் போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியும், அல் நஜ்மா அணியும் மோதின. இப்போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய ரொனால்டோ, போட்டியின் 56வது நிமிடத்திலும், 73வது நிமிடத்திலும் இரு கோல்கள் போட்டு அசத்தினார். போட்டியின் கடைசியில், அல் நஸர் அணி, 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. இது, அல் நஸர் அணி தொடர்ச்சியாக 13வது முறையாக பெறும் வெற்றி ஆகும். இந்த வெற்றி மூலம், அந்த அணி, 70 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தில் அல் ஹிலால் உள்ளது.

* எஸிபெங்கோ உடன் பிரக்ஞானந்தா டிரா
பாபோஸ்: சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் 5வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ரஷ்ய வீரர் ஆந்த்ரே எஸிபெங்கோ உடனான போட்டியில் டிரா செய்தார். உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிண்டாரோ, அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி, 4,5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா, ஜெர்மனி வீரர் மாத்தியாஸ் புளுபாமை வீழ்த்தி, 3.5 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி, சீனாவின் வெ யியுடன் மோதி டிரா செய்தார்.

Tags : Shreyas Iyer ,Chennai ,Punjab Kings ,Chennai Super Kings ,Punjab ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...