- சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ்
- ஈவா
- சார்ல்ஸ்டன்
- ஈவா ஜோவிக்
- சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர்
- சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ் போட்டி
- சார்லஸ்டன், அமெரிக்கா
சார்லஸ்டன்: சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிச் அபார வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில், சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில், அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிச் (18), ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய இவா, முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டையும் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிச் சுற்றில், உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோடப்ட்செவா (26), அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லர் (26) மோதினர். இப்போட்டியில் சாதுரியமாக ஆடி புள்ளிகளை சேர்த்த யூலியா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் அரையிறுதியில் இவா ஜோவிச்- அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் உடன் யூலியா மோதவுள்ளார்.
