×

கவுண்டம்பாளையம் தொகுதியில் 2வது நாளில் 3 பேர் வேட்பு மனு

பெ.நா.பாளையம், ஏப்.3: கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இங்கு தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். வரும் 6-ம் தேதி முடிய வேட்பமான தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது.

நேற்று காலை 11 மணியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. இரண்டாவது நாள் ஆன நேற்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன், ராஜலிங்கம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

Tags : Kaundampalayam ,P.N. Palayam ,North Revenue Divisional Commissioner ,Kaundampalayam, Coimbatore ,
× RELATED தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி