×

சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று ஆந்திராவில் வீடுகள் முன் விளக்கேற்றிய பொதுமக்கள்: அமராவதி தலைநகர் ஒப்புதலுக்கு வரவேற்பு

திருமலை: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: 2 கோடி மக்களின் கனவான அமராவதி தலைநகர் என்பதை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமராவதிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் விளக்குகள் ஏற்றப்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் தலைநகரைக் கொண்டாட வேண்டிய நேரம். அமராவதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனையடுத்து நேற்று மாலை தலைநகருக்கு அடிக்கல் நாட்டப்பட்ட உத்தண்டராயுனிபாலேமில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பங்கேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தீபம் ஏற்றினார்.

Tags : Andhra Pradesh ,Chandrababu Naidu ,Amaravati ,Tirumala ,Chief Minister ,NDA ,Parliament ,
× RELATED திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி