×

மபி திருமணத்தில் மோதல் சரக்கு தராததால் மணமக்கள் மீது தாக்குதல்

குவாலியர்: மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ஏற்பாடு செய்யாததால் திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப்பிரதேசத்தில் அரோன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பட்டை கிராமத்தில் செவ்வாயன்று இரவு அந்த பகுதியை சேர்ந்த மகேஷ் யாதவ் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டிற்கு மணமகள் வந்தபின் சடங்குகள் நடந்து கொண்டு இருந்ததாக தெரிகின்றது.

அப்போது அங்கு வந்திருந்த விருந்தினர் சிலர் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மது விருந்து வேண்டும் என்று மணமகனை வற்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மணமகன் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் விருந்தினர்கள் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mabi ,Madhya Pradesh ,Batt village ,Aron police station ,Mahesh Yadav ,
× RELATED திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி