×

பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை சுங்க வரி விலக்கு

புதுடெல்லி: பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை ஒன்றிய அரசு இறக்குமதி வரி விலக்கு அளித்துள்ளது.  மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடந்து வரும் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை கருத்தில் கொண்டு முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு முழுமையான சுங்க வரி விலக்கு அளிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள், ரசாயனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற உற்பத்தி துறைகள் போன்ற பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலைத் தயாரிப்புக்களை சார்ந்திருக்கும் துறைகள் இந்த வரி விலக்கினால் பயன்பெறும். இந்த வரி விலக்கு நடவடிக்கையால் அரசு கருவூலத்திற்கு ரூ.1800கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிகின்றது.

Tags : New Delhi ,Union government ,West Asia ,
× RELATED திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி