- காங்கிரஸ்
- மணிக்கம் தாகூர்
- சென்னை
- பாஜக
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகை
- கிரிஸ் சோடங்கர்
- மத்திய
- காங்கிரஸ் தேர்வுக் குழு
- தில்லி
சென்னை: காங்கிரஸ், பாஜ இன்னமும் வேட்பாளர் பட்டியல் வெளியிடாமல் இருக்கின்றனர். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கிரிஸ் சோடங்கர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்வுக் குழுவும் இறுதி பட்டியலை தயார் செய்தது. ஆனால் வேட்பாளர்களை தேர்வு வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதனால் காங்கிரஸ் சார்பாக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து கொண்டிருகிறது. வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எடுத்துள்ள அதிரடி முடிவு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் நீடிக்கும் இழுபறிகள் மற்றும் வேட்பாளர் தேர்வில் எழுந்துள்ள புகார்கள் காரணமாக தனது பதவியை மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான கடிதத்தை மல்லிகார்ஜுனா கார்கேவிடம் வழங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில், தமிழக காங்கிரஸ் சார்பில் மேலிடத்தில் கொடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்பி ஜோதிமணியும் அதிருப்தி தெரிவித்து, டெல்லி தலைமையிடம் பேசினார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிவது குறிப்பிடத்தக்கது.
