×

கார் மோதியதில் முதாட்டி பலி

நாமகிரிப்பேட்டை, ஏப்.2: வெண்ணந்தூர் அருகேயுள்ள அத்தனூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு, நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி கும்பிட வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது காரை நிறுத்த சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு நின்றிருந்த காரின் பின்னால் மோதி, அங்கு நடந்து சென்ற பாப்பு(77) என்பவர் மீது மோதினார். இதில், கீழே விழுந்த பாப்பு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பு, தீவிர சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Namagiripettai ,Amman temple ,Attanur ,Vennandur ,Panguni Uttara ,
× RELATED ஓய்வு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்