×

தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா இளங்குன்னி ஊராட்சி ஒன்றிய

செங்கம்.ஏப்.2: இளங்குன்னி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது; செங்கம் அடுத்த இளங்குன்னி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழாநேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியங்கா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுதா வரவேற்றார். முன்னாள் மாணவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவர்களின் பாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, மாறுவேட போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீப்பத்துறை பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன், பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் ரஞ்சிதா ஏற்பாடு செய்தார். முடிவில் இடைநிலை ஆசிரியர் ஆறுமுகத்தாய் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ilangunni Panchayat Union ,Ilangunni Panchayat Union Primary School ,Chengam ,Management Committee ,Chairperson ,Priyanka ,
× RELATED திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை...