×

ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் 2 தங்கம், ஒரு வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி

ஸ்பெயின்: ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்தை தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வென்றார். ஸ்பெயின் நாட்டின் டோலிடோவில் சர்வதேச ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. லெவன்-1 போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கம் வென்று அசத்தினார். மகளிர் இரட்டையர் பிரிவில் மானசிஜோசியுடன் இணைந்து மற்றொரு தங்கப்பதக்கத்தை வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் நித்தேஷ்குமாருடன் இணைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று துளசிமதி முருகேசன் சாதனை படைத்துள்ளார்.

மற்றொரு இந்திய வீரர் பிரமோத் பகத் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். இதற்கு முன் துளசிமதி முருகேசன், ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றிருந்தார். தற்போது சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Tulasimathi ,Spanish Para Badminton ,Spain ,Tulasimathi Murugesan ,International Spanish Para Badminton Series ,Toledo, Spain ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!