- அப்ரிடி
- லாகூர்
- ஷஹீன் ஷா அஃப்ரிடி
- பாகிஸ்தான் சூப்பர் லீக்
- பாகிஸ்தான் சூப்பர்
- லீக்
- பி.எஸ்.எல்
- பாகிஸ்தான்...
லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக, வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நான்கு பார்வையாளர்களை தங்களது அறைக்குள் அனுமதிக்க ஷஹீன்ஷா அப்ரிடி, சிக்கந்தர் ராசா இருவரும் அனுமதி கோரியதாகவும், அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அவர்களை விடாபடியாக அறைக்குள் அழைத்துச் சென்றதாகவும் இருவர் மீதும் பஞ்சாப் காவல்துறை குற்றம் சாட்டியது.
விருந்தினர்கள் சுமார் மூன்று மணி நேரம் அறையில் தங்கியிருந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு லாகூர் குவாலண்டர்ஸ் அணி விளக்கமளித்தது. இது தவறான புரிதலால் ஏற்பட்டது என்றும், வேண்டுமென்றே விதிகளை மீறவில்லை என்றும் அணி உறுதிப்படுத்தியது. இதுகுறித்து பேசிய ராசா, ‘‘ஷஹீன் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. என் நண்பர்களும் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
என் கோரிக்கையின் பேரில் தான் அவர்களை என் அறைக்கு அழைத்து வர ஷஹீன் உதவினார். இது விதிமீறல்களுக்கு எதிரானது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இங்கு குற்றவாளி நான்தான், ஷஹீன் அல்ல,” என்று விளக்கமளித்தார். இருப்பினும் விதிமுறைகளை மீறியதற்காக, ஷஹீன் ஷா அப்ரிடிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக அவரது அணியான லாகூர் குவாலண்டர்ஸ் விதித்தது.
