×

வங்காளதேசத்திற்கு எதிரான தொடர் நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடவுள்ளது. இம்மாத மத்தியில் தொடங்கும் போட்டிகள் மே 2ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் டாம் லாதம், டேன் கிளவர், வில் ஓ ரூக்கே, முகமது அப்பாஸ், டீன் பாக்ஸ்கிராப்ட், பென் சியர்ஸ், அதி அசோக், நிக் கெல்லி, நாதன் ஸ்மித், கிரிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் டெனக்ஸ், பிளைர் டிக்னெர், ஜோஷ் கிளார்க்சன், ஹென்றி நிக்கோலஸ், வில் யங் இடம் பிடித்துள்ளனர்.

டி 20 அணியில் டாம் லாதம், டிம் ராபின்சன், மாட் பிஷர், கே.கிளார்க், டீன் பாக்ஸ்கிராப்ட், பென் சியர்ஸ், இஸ் ஷோதி, நிக் கெல்லி, நாதன் ஸ்மித், கிறிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் டெனக்ஸ், பிளைர் டிக்னெர், ஜோஷ் கிளார்க்சன், டேன் கிளவர், பெவின் ஜேக்கப் இடம் பெற்றுள்ளனர்.

Tags : New Zealand ,Bangladesh ,Wellington ,New Zealand cricket ,T20 ,Tom Latham ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!