சண்டிகர்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கூப்பர் கானலி 72 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 37 ரன்களும் எடுத்தனர்.
