நத்தம், ஏப். 1: நத்தம் அருகேயுள்ள அரவங்குறிச்சி, மங்களப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அழகர் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரவங்குறிச்சி மயான கண்மாய் மற்றும் மங்களப்பட்டி- செங்குறிச்சி மதுபான கடை அருகே பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 106 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
