திண்டுக்கல், ஏப். 1: திண்டுக்கல் மாவட்டத்தில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியினரால் தேர்தல் நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கல், மதுபானம், கையூட்டு வழங்கல் போன்ற புகார்களை c vigil என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் அடையாளம் வெளிப்படுத்தப்படாது. பொதுமக்கள் 100 சதவீத தூய்மையான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
