×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார் அன்பில் மகேஷ்

திருச்சி, ஏப்.1: திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிபிஎம் அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார். திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிபிஎம் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு கோரினார்.

நிகழ்ச்சியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) முக்கிய நிர்வாகிகளான மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் ஜெயசீலன், மாவட்ட செயலாளர் வெற்றி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். மேலும், இந்த சந்திப்பின் போது திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் வேட்பாளருடன் உடனிருந்தார். நிர்வாகிகள் அனைவரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

 

Tags : Anbil Mahesh ,Communist Party of India ,Trichy ,Thiruverumpur ,Anbil Mahesh Poyyamoshi ,CPM ,Marxist ,CPM… ,
× RELATED திருச்சி மாவட்ட 9 தொகுதிகளில் ஒரேநாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல்