×

திருவெறும்பூரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

திருவெறும்பூர், மார்ச் 28: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்று மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. திருவெறும்பூர் தேர்தல் அலுவலர் அமுதா, உதவி தேர்தலில் உள்ள கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் குறித்த பயிற்சிகளை வழங்கினர். அப்போது, வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

 

Tags : Thiruverumpur ,Thiruverumpur taluka ,
× RELATED விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து...