- சீர்காழி
- பறக்கும் அணி
- மயிலாடுதுறை மாவட்டம் 160
- தனி
- சட்டப்பேரவை சட்டமன்றத் தொகுதி
- பறக்கும் படை-7
- தோட்டக்கலை
- அதிகாரி
- சுகன்யா
சீர்காழி, ஏப்.1: சீர்காழி அருகே பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.67,300ஐ பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் 160.சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதி, பறக்கும் படை-7, தோட்டக்கலை அலுவலர் சுகன்யா, தலைமையில் கூத்தியம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி சுப்பிரமணியன் மகன் சிவக்குமார் என்பவர் எடுத்து வந்த ரூ.67,300ஐ பறிமுதல் செய்து, சீர்காழி தலைமை இடத்து தனி தாசில்தார் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்தத் தொகை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
