×

சீர்காழியில் 100 சதவீதம் வாக்களிக்ககோரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

சீர்காழி, மார்ச் 30: சீர்காழியில் 100%வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி ஆர்டிஓ தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் சீர்காழி டிஎஸ்பி சரவணன் முன்னிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில்100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் 100% வாக்களிப்பது,

நமது கடமை அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆர்டிஓ சுரேஷ் வானங்களில் ஒட்டி பணியை தொடங்கி வைத்தார். அப்போது சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம், சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல் ராஜ்,சப் இன்ஸ்பெக்டர் அங்கவை,தலைமை இடத்துதனி தாசில்தார் பாபு மண்டல துணை தாசில்தார் கணேசன்,தேர்தல் தனி தாசில்தார் சரவணன்,ஒருங்கிணைப்பாளர் லைன்ஸ் சக்தி வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

 

Tags : Sirkazhi ,RTO ,Revenue ,Divisional Commissioner ,Suresh ,DSP ,Saravanan… ,
× RELATED கோடை காலத்தில் கண்களை பராமரிக்கும் முறை