×

கீழ்வேளூர் அருகே தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையில் ரூ.58,200 பறிமுதல்

கீழ்வேளூர் ஏப். 1:கீழ்வேளூர் அருகே வாகன சோதனையில் ரூ.58,200ஐ தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழ்வேளூர் பைபாஸ் சாலையில் துணை வட்டாட்சியர் வித்யா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.58,200ஐ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் லயன்ஸ் கார தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் சரண்ராஜ் என்பவர் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில்துணை ஆட்சியர் ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Election Flying Squad ,Kilvellur ,Flying Squad ,Deputy ,Tahsildar Vidya ,Kilvellur Bypass Road ,Assembly ,Constituency ,
× RELATED கோடை காலத்தில் கண்களை பராமரிக்கும் முறை