- துணை தலைமை உதவி செயலாள
- ஸ்டாலின்
- மலை
- திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி
- எம்.கே.
- வேலு
- துணை முதலமைச்சர்
- ஆத்யனிதி ஸ்டாலின்
- உதயநிதி ஸ்டாலின்
- மோடி
தி.மலை: திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; ஜாடிக்கு ஏத்த மூடி என சொல்வதைப் போல, மோடிக்கு ஏத்த அடிமையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் முரட்டு அடிமையை விரட்டியடிக்கக் கூடிய தேர்தல்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். இந்த தேர்லில் தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of Control என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். எப்போதும் எதிலும் வல்லவர் எ.வ.வேலு.
எதை செய்தாலும் கச்சிதமாக முடிக்கக்கூடியவர். தலைநகர் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை திராவிட மாடல் ஆட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட பெருமைமிகு கட்டிடங்கள் அனைத்திலும் அண்ணன் எ.வ.வேலு அவர்களின் பணி அளப்பரியது. திராவிட மாடல் ஆட்சியின் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மக்களின் முடிவுகளை தலைவணங்கும் வகையில், பல்வேறு புதிய அறிவிப்புகளும் உதவித்தொகைகள் அதிகரித்தும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழக மக்களிடம் 505 வாக்குறுதிகள் அளித்தோம். கொடுத்த வாக்குறுதிகளில் 400-க்கும் அதிகமானவற்றை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். மக்களிடம் தி.மு.க.வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மீண்டும் தி.மு.க. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். 2021 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். கடந்த தேர்தலில் 95,000 வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் எ.வ.வேலு அவர்களை வெற்றி பெற வைத்தீர்கள்.
இந்த முறை 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.” மோடி, அமித்ஷாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. முரட்டு பக்தர், முரட்டு தொண்டன் என்று கேள்விப்பட்டிருப்போம்; அதுபோல், மோடியின் ‘நம்பர் ஒன்’ முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று கூறினார்.
