×

மாவட்டத்தில் முதல் நாளில் 17 பேர் வேட்பு மனு தாக்கல்

 

மதுரை, மார்ச் 31: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் சிபிஐ(எம்எல்) சார்பில் கே.மெய்யர், நாதக சார்பில் கோட்டைகுமார் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மதுரை மத்திய தொகுதியில் நாதக சார்பில் அப்துல் ஹக்கீம், சுயேட்சை மகேஸ்வரன் ஆகியோரும், மதுரை கிழக்கில் நாதக சார்பில் கே.செல்வம், சுயேட்சை ப்ரீத்தி ஆகியோரும், மதுரை வடக்கில் நாதக வேட்பாளர்களாக ராஜ்குமார், திருநாவுக்கரசு ஆகியோரும், எஸ்யூசிஐ சார்பில் வால்டேர், சுயேட்சையாக சங்கரபாண்டி, முத்துசாமி ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

மதுரை தெற்கில் சுமதி, மதுரை மேற்கில் விக்னேஷ்குமார், திருமங்கலத்தில் டாக்டர் முனீஸ் ஆகியோர், நாதக சார்பிலும், சோழவந்தான் (தனி) தொகுதியில் நாதக சார்பில் டி.நாகலட்சுமி, சுயேட்சையாக கோபால் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். திருப்பரங்குன்றத்தில் நாதக வேட்பாளர் சத்யாதேவி, 4 மனுக்கள் தாக்கல் செய்தார். உசிலம்பட்டி தொகுதியில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை வடக்கு தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

 

Tags : Madurai ,Tamil Nadu Legislative Assembly general elections ,K. Meyer ,CPI ,ML ,Kottaikumar ,Nathaka ,Melur ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில்...