- Tirupathur
- கீரனிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்
- முத்து மரியம்மன் கோயில்
- கீரணிப்பட்டி
- திருப்பத்தூர். ...
திருப்புத்தூர், மார்ச் 31: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டியில் பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிமுதல் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். தொடர்ந்து கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, சேவனிப்பட்டி, கீழச்சிவல்பட்டி, வடக்கு இளையாத்தங்குடி,
தெற்கு இளையாத்தங்குடி, குருவிக்கொண்டான்பட்டி, செவ்வூர் உள்ளிட்ட 25க்கும் மேற்ப்பட்ட கிராமங்களைச்சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு எடுத்துவந்து பூச்சொரிந்து வழிபட்டனர். தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களாலும், பக்தர்கள் கொண்டு வந்த பாலாலும் சிறப்பு அபிஷேகம், தீபாரதணை நடைபெற்றது. தொடர்ந்து விடியற்காலை 3 மணியளவில் பக்தர்கள் கொண்டுவந்த பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதலும், சிறப்பு தீபாரானையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.
