×

இன்றும், நாளையும் விடுமுறை

வேட்பு மனுத் தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் இன்று (31-ம் தேதி) நாளை ஏப்ரல் 1ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது. நாளை மறுதினம் ஏப்ரல் 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை ஆகும் எனவே அன்றைய தினமும் மேற்கு மாவட்ட தாக்கல் செய்ய இயலாது. இதனால் வருகிற ஏப்ரல் 4ம் தேதி சனிக்கிழமை மனு தாக்கல் செய்யலாம். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி பொது விடுமுறை தினமாகும் எனவே அன்றைய தினமும் மேற்கு மாவட்ட தாக்கல் நடைபெறாது.

வருகிற ஏப்ரல் 6 தேதி திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 30.03.2026 முதல் 06.04.2026 வரை மேற்குறிப்பிட்ட விடுமுறை நாட்கள் தவிர்த்து, காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சம்பந்தப்பட்ட சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

 

Tags :
× RELATED தூத்துக்குடி கடற்கரையில்...