×

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: கட்சிக் கொடிகள் விற்பனை விறுவிறு

 

மதுரை, மார்ச் 31: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வீதி, வீதியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி மதுரையில் கட்சி கொடிகள், கட்சி கரை துண்டுகள், விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கீழ ஆவணி மூல வீதியில் பெரியது முதல் சிறிய கடைகள் வரை கட்சி கொடிகள், கட்சி கரை வேட்டிகள், துண்டுகள் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகிறது. இங்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், தவெக உள்ளிட்ட மாநில, தேசிய கட்சிகளின் கொடிகள், வரவேற்பு அட்டைகள், தலைவர்களின் உருவ முகமூடிகள், பேட்ஜ்கள், துண்டுகள் விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: இரண்டு தலைமுறையாக கட்சி கொடி வியாபாரம் செய்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் கொடி, துண்டு ஆர்டர் செய்ய தொடங்கி விட்டனர். அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகளும் விற்பனைக்கு வைத்துள்ளோம். உள்ளூர் மட்டுமின்றி ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் இங்குவந்து கொடிகளை வாங்கி செல்கின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வணிகம் நடைபெறும். இவ்வாறு கூறினார்.

Tags : Madurai ,Tamil Nadu Assembly ,Keezhavaani Moola Street ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில்...