- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- STBI
- சென்னை
- முகமது முபாரக்
- 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் முகமது முபாரக் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை, வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பாக மட்டுமில்லாமல், தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டுகால வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்கு ஆவணமாக திகழ்கிறது. ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற கலைஞரின் தாரக மந்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தியிருப்பது மிகச்சிறந்த முடிவாகும்.
இதனுடன் சேர்த்து, நடுத்தர மற்றும் ஏழை இல்லத்தரசிகளுக்கு மின்சாதனப் பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கும் ‘இல்லத்தரசி திட்டம்’ வீட்டு நிர்வாகத்தில் பெண்களின் சுமையைக் குறைக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் இந்த அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல், சிறுபான்மையின மாணவர்களின் கல்வி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான மேம்பாட்டு நிதியை உயர்த்தியிருப்பது சமூக நல்லிணக்கத்தைப் பேணும் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது.
