×

புளியங்குடியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராஜா

புளியங்குடி, மார்ச் 31: வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜாவுக்கு புளியங்குடி நகர முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ, பார்ட் அறக்கட்டளை அலுவலகங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஷேக் காதர்மைதீன் வரவேற்றார். வர்த்தக அணி மாநில தலைவர் செய்யது சுலைமான், முஸ்லிம்லீக் மாவட்ட முதன்மை துணைத்தலைவர் அப்துல் வகாப் ஆகியோர் பேசினர். வரவேற்புக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர் ராஜா, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி பேசினார். நிகழ்வில் மாவட்டத் துணைத்தலைவர் கலீல்ரகுமான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஹீம், நகர நிர்வாகிகள் பத்திரம் பாத்துஷா அப்துல்ரகுமான், பாபக்கி தங்கள் முகமது பிலால், டெய்லர் காஜாமைதீன், நகர திமுக செயலாளர்கள் அந்தோணிசாமி, நாகூர்கனி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், பத்திரம் சாகுல்ஹமீது, வக்கீல் பிச்சையா, காங்கிரஸ் நகர தலைவர் பால்ராஜ், சிபிஐ நகரச் செயலாளர் வேலு, சாகுல்ஹமீது உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மேல பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பில் தலைவர் மௌலல் கௌமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைத்தலைவர் சாகுல்கமீது, பள்ளிவாசல் தலைமை இமாம் கலீல்ரகுமான் வேட்பாளருக்கு சால்வை அணிவித்தார். கீழ பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பில் தலைவர் ரெசவுப்பா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைத்தலைவர் அப்துல் ஜபார், மைதீன் ஆகியோர் பேசினர். தமுமுக அலுவலகத்தில் நகரத் தலைவர் செய்யதுஅலி பாதுஷா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் பேசினார். எஸ்டிபிஐ அலுவலகத்தில் நகரச் செயலாளர் நவாஸ் கான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர் ராஜா, புளியங்குடி வர்த்தக சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Tags : DMK ,Raja ,Puliyangudi ,Vasudevanallur ,Puliyangudi city Muslim League ,TMMK ,STBI ,BART Trust ,City President ,Abdul Rahman ,City Secretary ,Sheikh Kadharmaideen… ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி