×

துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி தூத்துக்குடி துறைமுகம் தங்கம் வென்று சாதனை

தூத்துக்குடி, மார்ச் 31: அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் வஉசி துறைமுகம் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. புதிய மங்களூரு துறைமுகத்தில் அகில இந்தியப் பெருந்துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. கடற்கரை கைப்பந்து போட்டிளில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி, கொச்சி துறைமுக அணியை 21-17, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. சாதாரண கைப்பந்து போட்டியில் சென்னை துறைமுக அணியை 25-18, 25-14 என்ற கணக்கில் வீழ்த்தி 3ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. நாடு முழுவதும் இருந்து கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், வஉசி துறைமுக அணி இரு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thoothukudi Port ,inter-port ,Thoothukudi ,VOC Port ,All India Inter-Port Volleyball Tournament ,All India Inter-Port Volleyball ,Beach Volleyball Tournaments ,New Mangalore Port… ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி