சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கழகத்தின் சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி,
ஏப்ரல் 2ம் தேதி – தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதியில் மலை 3 மணி முதல் பிரசாரம் செய்கிறார். 3ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, வேலூர் தொகுதி, 4ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி, விழுப்புரம் தொகுதி, 5ம் தேதி – புதுச்சேரி, கடலூர், 6ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி, 7ம் தேதி – சேலம் மாவட்டம் வாழப்பாடி, கங்கவல்லி, ஆத்தூர் தொகுதி, 8ம் தேதி மற்றும் 9ம் தேதி – சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள், 10ம் தேதி – காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தொகுதி, 11ம் தேதி – தஞ்சாவூர், திருவாரூர் தொகுதி, 12ம் தேதி நாகப்பட்டினம் தொகுதி,
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் (பூம்புகார் தொகுதி), 13ம் தேதி – திருச்சி, திண்டுக்கல் தொகுதி, 14ம் தேதி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி, மதுரை மாவட்டம், 15ம் தேதி – கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், 16ம் தேதி – கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி, 17ம் தேதி – சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள், 18ம் தேதி – நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் மற்றும் தொகுதி, 19ம் தேதி – சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இந்த பிரசாரங்கள் அனைத்தும் மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
