×

மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சி அறிவிப்பு

 

சென்னை: மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டியிடுவார் என்று புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுவார். மற்றொரு தொகுதி பின்னர் அறிவிக்கப்படும். அங்கு வேட்பாளர் பாஜவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் நடிகர் சுந்தர்.சி. போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழக பாஜ துணை தலைவராக இருக்கும் நடிகை குஷ்புவின் கணவர் தான் சுந்தர் சி. முதல்முறையாக இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்.

Tags : Sundar.C ,Madurai Central ,New Justice Party ,Chennai ,AIADMK ,Justice Party ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...