- திமுக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- பிரதி பொது செயலாளர்
- கனிமொழி எம்.பி.
- டிகேஎஸ் இளங்கோவன்
- கோவை செழியன்
- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
- டி. ஆர். பி. ராஜா
- திமுக அயலகா கட்சி
- எம்.எம். அப்துல்லா
- செய்தியாளர் செயலாளர்
- கான்ஸ்டன்டைன்…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டது. இதை அறிக்கையாக தயாரித்து இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரிபார்த்து தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இந்த தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
