×

எந்த முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி: வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் வாழ்த்து பெறுவதற்காக இங்கு வந்தோம். நாங்கள் அறிவித்திருக்கக்கூடிய வேட்பாளர்கள் மட்டுமில்லாமல் எங்களது கூட்டணி கட்சியின் வேட்பாளர்களும் மாபெரும் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். இந்த தேர்தல் தற்போது தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கான தேர்தல் என்பதில் சந்தேகமில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறக்கூடிய வகையில் அமைய இருக்கிறது. எந்த முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK alliance ,Chief Minister ,MK Stalin ,Chennai ,DMK ,Anna ,Arivalayam ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...