×

சினிமாவை பார்த்து ரசிங்க… விஜய்யை கலாய்த்த எடப்பாடி: நிஜ வாழ்க்கை என்பது கடினம்… சினிமா என்பது கனவைபோல…

சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில், அதிமுக தேர்தல் பிரசாரம் நேற்று நடந்தது. தாம்பரம் தொகுதி வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், செய்யூர் தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர் கஜேந்திரன், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், பல்லாவரம் தொகுதி வேட்பாளர் இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு கேட்டார். இதில் எடப்பாடி பேசும்போது, ‘‘இன்னொரு கட்சி இருக்குது, யாராவது இறந்துபோனா அங்கபோய் துக்கம் விசாரிப்பாங்க. ஆனா இந்த கட்சியின் கொடுமை பாருங்க, எதுக்காக இறந்தாங்க? ஏன் இறந்தாங்க? அந்த குடும்பத்தை இங்க வரவழைச்சு அனுதாபம் சொல்றாங்களாம்.

இது சினிமா, அப்படித்தான் இருக்கும், டெக்னிக்கலாத்தான் இருக்கும். மக்கள் ஏமாறவேண்டாம். சினிமா பார்க்கலாம், எதுக்கு? மனசுல இருக்கிற கஷ்டங்களை போக்குவதற்கு சினிமா பார்க்கலாம், ரசிக்கலாம், அதோடுவிட்டுவிடணும். நிஜ வாழ்க்கையில ஒத்துவருமா? நிஜ வாழ்க்கை வேற, சினிமா வாழ்க்கை வேற, தயவு செய்து இளைஞர்களும் பெண்களும் சிந்தித்து பார்க்கவேண்டும். நிஜ வாழ்க்கை என்பது கடினம், சினிமா என்பது கனவைபோல, கண்ணை திறந்தால் கனவு மறைந்துபோய்விடும். அதுபோல சினிமா பார்த்துவிட்டு வெளியிலே வந்துவிட்டால் அதோடு போயிரும். இளைஞர்கள், பொதுமக்கள் சிந்திக்கவேண்டும்’’ என்றார்.

Tags : Edappadi ,Vijay ,AIADMK ,Shanmugam Road ,Tambaram, Chennai ,Tambaram ,Chitlappakkam Rajendran ,Seyyur ,Perumbakkam Rajasekhar ,Chengalpattu ,Gajendran ,Madhurantakam ,Maragatham Kumaravel ,Pallavaram ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...