×

வரும் 31ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். தேர்தல் பிரசாரத்தை வரும் 31ம் தேதி முதல் தொடங்க இருக்கிறேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 31ம் தேதியும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி 30ம் தேதியும் தொடங்கவுள்ளனர். அடுத்தகட்ட பிரசாரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பழனிசாமி கூறி வருகிறார். அவர் அப்படித்தான் சொல்வார். வேறு ஒன்றும் சொல்வதற்கு வழி இல்லாததால் அதை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பாக முகவர்கள், பூத் கமிட்டி எல்லாம் போட ஆரம்பிச்சிட்டோம். அதனால் தாமதம் கிடையாது. நாங்க தான் முன்கூட்டியே பண்ணிட்டு இருக்கிறோம். மண்டல அளவில் பூத் கமிட்டி கூட்டம், பாக முகவர் கூட்டம் நடத்தினோம். இளைஞர் அணி, மகளிர் அணி மாநாடுகள் நடத்தினோம். இவ்வளவு பண்ணிட்டு இருக்கோம், அதெல்லாம் வேலை இல்லையா? அதுவும் தேர்தல் வேலை தான். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து இப்பவே சொன்னால் இன்ட்ரஸ்ட் போயிடாதா? நாளைக்குத் தானே சொல்லணும்? இன்று தேர்தல் அறிக்கையில் சொல்லுவோம் என்றார். தொடர்ந்து நிருபர்கள், சீட் கிடைக்காதவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா அடிக்கடி சொல்லியிருக்காரு, ஒரு கல்யாணத்துக்குப் போகும் போது ஒரு பட்டுப்புடவை தான் கட்டிட்டுப் போக முடியும். பீரோல இருக்குற எல்லா பட்டுப் புடவையும் கட்டிட்டுப் போக முடியாது. அடுத்த கல்யாணத்துக்கு அந்த பட்டுப்புடவைய கட்டிட்டுப் போவோம்னு அண்ணாவே சொல்லியிருக்காரு. அதை தான் நான் சொல்றேன். தொகுதிகள் ஒதுக்கீடு எந்த அடிப்படையில் செய்யப்பட்டது? நாங்க வெற்றி பெறப்போகிறோம் என்ற அடிப்படையில் தான் கொடுத்திருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டணியை எப்படி முன்னெடுத்துச் செல்வீர்கள்?
அதான் திமுக, அதான் திமுக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,DMK ,President ,Anna Arivalayam ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin… ,
× RELATED திமுக கூட்டணியில் மதிமுக...