கிருஷ்ணகிரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த அரசு மருத்துவர்கள்

கிருஷ்ணகிரி, பிப்.18:  கிருஷ்ணகிரியில் கோரிக்கை அட்டை அணிந்து அரசு மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர், நேற்று (17ம் தேதி) முதல் இரு வாரங்களுக்கு கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ய முடிவு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவ கூட்டமைப்பைச் சேர்ந்த 300 மருத்துவர்கள், நேற்று அரசு மருத்துவமனையில் 4 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர். இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு-அரசாணை 354ன் படி ஊதியம் பதவி உயர்வு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு, உயர் சிறப்பு மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும். முறையான பணி உயர்வு, இடமாறுதல் ஆகியவற்றை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்கிறோம்,’ என்றனர்.

Related Stories: