- தேர்தல் ஆணையம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- எம். வீரபாண்டியன்
சென்னை: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் இன்னல் அடைந்து வரும் நிலையில், கள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து ஈரான் மீது நடத்தும் ராணுவ ரீதியான தாக்குதல்களின் காரணமாக, நாடு முழுவதும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உணவு விடுதிகள், தேனீர் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. காஸ் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக அதிக விலைக்கு விநியோக நிறுவனங்கள் விற்பதாக கூறப்படுகிறது. எனவே, காஸ் சிலிண்டர் பதுக்கலையும், அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்கப்படுவதையும் தடுத்திட, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இக்குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
