×

தேர்தல் பறக்கும் படை சோதனை ரூ.273.72 கோடி பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் நடத்திய சோதனையில் ரூ.273.72 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் ரூ.44.89 கோடி ரொக்கம், ரூ.0.93 கோடி மதுபானம், ரூ.7.60 கோடி போதைப்பொருட்கள், ரூ.116.07 கோடி விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) மற்றும் ரூ.104.20 கோடியிலான இதர பொருட்கள், இலவசங்கள் என மொத்தம் ரூ.273.71 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Election Flying Squad ,Chennai ,Election Commission ,Tamil Nadu ,
× RELATED திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி...