×

வணிக, தொழில்துறை எல்பிஜி நுகர்வோர் பிஎன்ஜி இணைப்புகளை பெற எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும்

சென்னை: வணிக, தொழில்துறை எல்பிஜி நுகர்வோர், பிஎன்ஜி இணைப்புகளைப் பெறுவதற்கு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: எல்பிஜி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கத்தால் வணிக எல்பிஜி ஒதுக்கீடு ஆரம்பத்தில் 20% ஆக குறைக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது வணிக வாடிக்கையாளர்கள் நெருக்கடிக்கு முந்தைய அளவில் 70% வரை பெற தகுதியுடையவர்கள்.

இருப்பினும், சில நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே முழு 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும். அனைத்து வணிக, தொழில்துறை எல்பிஜி நுகர்வோரும், கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து எல்பிஜியை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அத்தகைய எல்பிஜி நுகர்வோர், குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளுக்குப் பொருந்தும் வகையில், தத்தமது மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களில் பதிவு செய்து, பிஎன்ஜி பெறுவதற்கான தயார்நிலையை வெளிப்படுத்த வேண்டும். விருப்பமுள்ள வணிக, தொழில்துறை எல்பிஜி நுகர்வோர், பிஎன்ஜி இணைப்புகளை பெற சிஜிடி நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் கேஎஸ்ஆர்.பிரசாத், நிர்வாக இயக்குநர், டேரின் காஸ் சென்னை பிரைவேட் லிமிட், தொடர்பு எண்: +91 63574 69742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Chennai ,Government of India ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...