×

பிளஸ் 1 வகுப்பு தேர்வு நிறைவு 20 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

சென்னை: பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான ஆண்டுத் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்வில் 20 ஆயிரத்து 900 பேர் வரவில்லை என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது என்று அரசு அறிவித்ததை அடுத்து இந்த ஆண்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கான அரியர் தேர்வு மற்றும் இந்த ஆண்டு படிக்கின்ற மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வும் கடந்த 3ம் தேதி முதல் நடந்தது. இறுதித் தேர்வு நேற்றுடன் முடிந்தது.

பிளஸ் 1 தேர்வில் பள்ளி மாணவர்கள் 19 ஆயிரத்து 107, அரியர் வைத்துள்ள தனித் தேர்வர்கள் 5944 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 51 பேர் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு 2615 மையங்களில் தேர்வு 7 நாட்கள் நடந்தது. இந்த தேர்வுப்பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 1208 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், தேர்வு எழுத பதிவு செய்திருந்தவர்களில் பள்ளி மாணவர்கள் 18 ஆயிரத்து 640 பேரும், தனித் தேர்வர்கள் 2318 பேரும் தேர்வில் பங்கேற்கவில்லை.

Tags : Chennai ,Electoral Department ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...