×

காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 எஸ்பிக்கள் மீண்டும் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு, நாகப்பட்டினம் பாலகிருஷ்ணன், கரூர் ஜோஷ் தங்கையா, விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் ஆகியோர் மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மேலும் 4 எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் மாற்றப்பட்டு, ஜவகர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்பி அனிதா மாற்றப்பட்டு கே.பிரபாகர், தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் மாற்றப்பட்டு சுந்தரவதனம், தென்காசி எஸ்பி மாதவன் மாற்றப்பட்டு மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 8 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Kanchipuram ,Chennai ,Tamil Nadu ,Erode ,Nagapattinam Balakrishnan ,Karur Josh Thangaiah ,Virudhunagar district ,SP ,Kannan ,
× RELATED திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி...