×

என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: என்சிஎச்எம் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2026-27ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவானது கடந்த டிசம்பர் 25ல் தொடங்கி மார்ச் 25ம் தேதியுடன் முடிந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,National Examinations Agency ,National Council for Catering Management and Food Technology ,NCHMCT ,
× RELATED திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி...