- மகாராஷ்டிரா
- அமைச்சர்
- மும்பை
- நர்ஹரி ஜிர்வால்
- முதல் அமைச்சர்
- தேவேந்திர ஃபட்னாவிஸ்
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- என்சிபி
மும்பை: மகாராஷ்டிரா அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் ஒரு திருநங்கையுடன் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரபட்நவிஸ் அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நர்ஹரி ஜிர்வால், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவர் நாசிக்கில் உள்ள சட்டமன்றத் தீன்தோஷி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். சமீபத்தில் அமைச்சர் ஜிர்வாலின் மந்திராலயாவில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லஞ்ச புகாரில் சிக்கியது சர்ச்சை ஆனது.
இதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர், திருநங்கை ஒருவருடன் இருப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இன்னும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் விஜய் வட்டேத்திவார், அமைச்சர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் கூறுகையில்‘அமைச்சரின் வீடியோ வெளியாவது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. எவ்வித தாமதமும் இன்றி ஜிர்வாலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
