புதுச்சேரி பாஜ தலைவர் வி.பி.ராமலிங்கம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தி, எந்தவித இடையூறும் இன்றி தேர்தலில் களம் காண தயாராகி விட்டோம். எந்தவித சலசலப்பும் இல்லாமல் எங்களின் கூட்டணி சென்று கொண்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் வரும் 27 முதல் 29 வரையிலான நாட்களில் வருகை தருகின்றனர். ஏப்.3ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி, புதுச்சேரியில் நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்கிறார் என்றார்.
